இந்தியா

உலக அளவில் மிக மோசமான ரயில் விபத்தாக பதிவான ஒடிசா ரயில் விபத்து!

உலக அளவில் மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் சரிந்து அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ரயில் பெட்டிகள் கவிழ்ந்திருந்த தண்டவாளத்தில் அதிவிரைவு ரயிலான எஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் கவிழ்ந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு சரிந்தன. இந்த இரண்டு பயணிகள் ரயிலுடன் மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர ரூபத்தில் இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2004க்கு பிறகு உலக அளவில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. 2004 சுனாமியின் போது இலங்கையில் 1700 பேர் உயிரிழந்த ரயில் விபத்து தான் மிக கோரமான ரயில் விபத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!