பெங்களூருவில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பணம் மீட்பு – காவல்துறை
நவம்பர் 19ம் திகதி இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள் 7.11 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
வங்கி கிளைகளுக்கு இடையே பணத்தை பரிமாற்றுவதற்கு முனைந்தபோது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துச் சென்றனர்.
அதனை தொடர்ந்து நவம்பர் 21ம் திகதி மூன்று முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 5.76 கோடி பணம் மீட்கப்பட்டது.
இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7.11 கோடியை முழுவதுமாக மீட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவிந்தபுரா(Govindapura) காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி அன்னப்பப்பா நாயக்(Annapappa Nayak) உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி




