லூவர்(Louvre) அருங்காட்சியக கொள்ளை – மேலும் 4 பேர் கைது
கடந்த மாதம் பிரான்சில்(France) உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் இருந்து பேரரச நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாரிஸின்(Paris) உயர் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள், 38 மற்றும் 39 வயதுடைய இரண்டு ஆண்கள், 31 மற்றும் 40 வயதுடைய இரண்டு பெண்கள் என்றும் அனைவரும் பாரிஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் வழக்கறிஞர் லாரே பெக்குவா(Laure Beccuau) குறிப்பிட்டுள்ளார்.
திருட்டு தொடர்பாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அக்டோபர் 19ம் திகதி உலகின் பிரபலமான அருங்காட்சியத்தில் ஒன்றான லூவ்ரே அருங்காட்சியத்தில் கொள்ளையர்கள் சுமார் 88 மில்லியன் யூரோ பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
தொடர்புடைய செய்தி
லூவ்ரே (Louvre) கொள்ளை சம்பவம் – மேலும் 03 சந்தேகநபர்கள் கைது!





