ஐரோப்பா

வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சட்டம் – ஸ்லோவாக்கியாவில் (Slovakia) வாக்கெடுப்பு!

கடுமையான நோய் தாக்கங்களை எதிர்கொண்டு போராடும் நோயாளிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துகொள்ள அனுமதிக்கும் சட்டமூலம் குறித்து ஸ்லோவாக்கியாவில் (Slovakia) வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் தொடர்புடைய சட்டமூலம்  அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் எதிர்பாளர்கள்  40,000 கையொப்பங்களை சேகரித்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கில் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களை கோரும் வகையில் மற்றொரு வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்புகளின்படி பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குணமடைய வாய்ப்பில்லாத அல்லது தாங்க முடியாத வலியை எதிர்கொள்ளும் நோயாளர்கள் இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் மற்றும் ஆலோசனைகளின் கீழ் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தொடர்புடைய சட்டம் ஒப்புதல் அளிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!