பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மலேசிய நாட்டவர்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் மலேசிய(Malaysian) நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 250 மில்லியன் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய மலேசிய நாட்டவர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அபுதாபியிலிருந்து(Abu Dhabi) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சாக்லேட் என பெயரிடப்பட்ட பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோகைன் தொகையை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.




