10 ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் ஆபத்தான வைரஸ் தொற்று!
ஐரோப்பிய நாடு முழுவதும் ஆபத்தான mpox தொற்றின் புதிய திரிபு பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
clade 1b என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த தொற்றினால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறைந்தது 45 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
clade 1b மாறுபாடு குழந்தைகள் இறப்பிற்கு 10 சதவீதம் பங்களிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பத்து ஐரோப்பிய நாடுகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மூலம் இந்த தொற்று ஐரோப்பிய நாடுகளிலும் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள குறைப்பாடு பரவலுக்கு பாரிய அளவு பங்களிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இதனை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளுக்கு 08 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நன்கொடையாளர்களின் மூலம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.





