கொலராடோ மாநிலத்தில் நீர் பற்றாக்குறை – சர்ச்சைக்குரிய தீர்மானத்தை எடுத்த நகர நிர்வாகம்!
அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் அரோரா (Aurora) என்ற பகுதியில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழக்கத்திற்கு மாறான வறட்சியான வானிலை பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகர நிர்வாகம் நீர் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு நீர் வழங்கப்படாது. அதாவது வாடிக்கையாளர் ஹோட்டல் ஊழியர்களிடம் தண்ணீர் கேட்டால் மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரம் அதன் மூன்று அதிகாரப்பூர்வ வறட்சி நிலைகளில் ஒன்றில் நுழையும் போது மட்டுமே, உணவகங்களில் தண்ணீர் வழங்குவதற்கான விதிகள் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் நகர நிர்வாகத்தின் இந்த முடிவு சர்ச்சைக்குரியதாக கருதப்படுகிறது. இதனை அமுல்படுத்துவதற்கான இறுதி முடிவு மக்களிடம் ஒப்படைக்கப்படும் என நகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.





