பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ (Jair Bolsonaro) கைது!
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ (Jair Bolsonaro) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கியமை, 27 ஆண்டுகாலம் சிறை தண்டனையை தவிர்க்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 மறுதேர்தல் முயற்சியில் தோல்வியடைந்த பிறகும் ஆட்சியில் நீடிக்க முயன்றமைக்காக ஜெய்ர் பொல்சனாரோ (Jair Bolsonaro) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய வழக்கறிஞர்கள் பொல்சனாரோவின் உடல்நிலையை காரணம் காட்டி வீட்டுக்காவில் வைக்க பிரேசிலின் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
ஆனால் பிரேசிலிய சட்டம் அனைத்து குற்றவாளிகளும் சிறையில் தங்கள் தண்டனையைத் தொடங்க வேண்டும் என்று கோருகிறது.
இந்நிலையில் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





