இலங்கை செய்தி

கடுகண்ணாவ மண்சரிவு – உயிரிழந்தவர்களில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும்

கண்டி(Kandy), பஹல கடுகண்ணாவ(Pahala Kadugannawa) பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 8.45 மணியளவிலேயே பாரிய பாறையொன்றுடன் மண் சரிந்துள்ளது. வீடும், உணவகமும் முற்றாக சேதமடைந்துள்ளது.

மண்ணுக்குள் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலம் ஆரம்பத்தில் மீட்கப்பட்டது. மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

மண்ணுக்குள் ஐவர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் 8 மணிநேர மீட்பு பணிக்கு பிறகு மேலும் மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இராணுவம், தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடும் மழை பெய்து வந்த நிலையிலேயே இன்று காலை 8.45 மணியளவில் கண்டி – கொழும்பு(Kandy-Colombo) பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது உணவகத்துக்குள் 9 பேர் வரை இருந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பேராதனை(Peradeniya) பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என தெரியவருகின்றது. இவர் மாவனல்லை பகுதியை சேர்ந்தவர்.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!