பெங்களூரு பணம் கொள்ளை : 3 பேர் கைது – 5.76 கோடி பறிமுதல்
நவம்பர் 19ம் திகதி இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள், 7.11 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
வங்கி கிளைகளுக்கு இடையே பணத்தை பரிமாற்றுவதற்கு முனைந்தபோது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்நிலையில், பெங்களூரு நகர காவல்துறையினர் பண மேலாண்மை சேவை(CMS) வாகனத்தில் நடந்த மிகப்பெரிய பணக் கொள்ளையை கண்டுபிடித்துள்ளனர், இதில் மூன்று முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்து ரூ.5.76 கோடியை மீட்டுள்ளனர்.
பெங்களூரு நகர காவல்துறையின் கிழக்குப் பிரிவில் உள்ள கோவிந்தபுரா(Govindapura) காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி அன்னப்பப்பா நாயக்(Annapappa Nayak), CMS பண மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவியர்(Xavier) மற்றும் CMS நிறுவனத்தின் வாகனப் போக்குவரத்துப் பொறுப்பாளர் கோபால் பிரசாத்(Gopal Prasad) ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக பெங்களூரு நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் கடந்த மூன்று மாதங்களாக கொள்ளையைத் திட்டமிட்டு, கடந்த 15 நாட்களாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து, பாதுகாப்பு கேமராக்கள் இல்லாத இடங்களைத் தேர்ந்தெடுத்து, போலி பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தி கொள்ளையை செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
இந்தியாவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை!





