பலவீனமான போர் நிறுத்தம் – காசாவில் 09 பேர் உயிரிழப்பு!
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 09 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட ரிமல் (Rimal) பகுதியில் காரொன்றை குறிவைத்து முதற்கட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
கார் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய விமானப்படை மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் (Deir Al-Balah) நகரத்திலும், நுசைராத் முகாமிலும் (Nuseirat camp) உள்ள இரண்டு வீடுகள் மீது தனித்தனி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் குறைந்தது 04 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வருட காசா போரில் அக்டோபர் 10 ஆம் திகதி ஏற்பட்ட போர் நிறுத்தம் மோதலைத் தணித்து, லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசாவில் மீள்குடியேற உதவி புரிந்தது.
இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் மோதல்கள் போர் நிறுத்தத்தை மீறும் செயல் என கருதப்படுகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





