பிரான்ஸ் தனது குழந்தைகளை இழக்க தயாராக இருக்க வேண்டும் – ஜெனரலின் கருத்தால் சர்ச்சை!
ரஷ்யாவுடன் ஏற்படக்கூடிய சாத்தியமான போரில் குழந்தைகளை இழக்க தயாராக இருக்க வேண்டும் என பிரான்ஸின் இராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2030 ஆம் ஆண்டில் ரஷ்யா , நேட்டோவுடனான போருக்கு தயாராகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் தன்னாட்டு குடிமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராணுவ அதிகாரி ஒருவர், நாம் யார் என்பதை அறிந்துகொள்ள துன்பத்தை எதிர்கொள்ளும் மன உறுதி வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா ‘சமாதானத்தை அறியவில்லை. மேற்கு ஐரோப்பியர்கள் நீண்ட காலமாக ஒப்பீட்டளவில் நிலைத்தன்மையின் காலங்களில் வாழ்ந்து வந்தமையால் அவர்களைச் சுற்றியுள்ள ஆபத்தைப் புரிந்துகொள்வது கடினம்” எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இதுபோன்ற கொள்கை விஷயங்களில் கருத்து தெரிவிக்க ஜெனரலுக்கு ‘சட்டப்பூர்வத்தன்மை’ இல்லை என்று பிரான்ஸின் அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.





