கண்டி – கடுகண்ணாவ நிலச்சரிவு – மேலும் ஒருவர் பலி!
கண்டி – கடுகண்ணாவையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது.
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் அமைந்திருந்த சில வர்த்தக நிலையங்கள்மீது மண்மேடு சரிந்து விழுந்தது. இடிபாடுகடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று காலை முதலே மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. மீட்பு பணியின்போது மேலும் ஒருவரின் உடலை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பலியானோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது.
நிலச்சரிவில் காயமடைந்த மேலும் நான்கு பேர் மாவனெல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
(Visited 3 times, 4 visits today)





