கரையோரப் பாதையில் ரயில் சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை!
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயில் ஒன்று இன்று மதியம் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடலோர ரயில் பாதையில் ரயில் சேவைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பழுதுபார்ப்பு முடிந்து பாதை பாதுகாப்பானதாக அறிவிக்கப்படும் வரை கடற்கரை பாதையில் ரயில் போக்குவரத்து கொழும்புக்கும் – வெலிகமவிற்கும் இடையில் மட்டுமே இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 3 times, 4 visits today)





