“தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்” – கிரிகெட் வீரர் சாமிக மீது வழக்கு தாக்கல்!
இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்ன மீது விமானப் பணிப்பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
குறித்த வழக்கில் அவர் தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் தனது குழந்தைக்கு பராமரிப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
கொழும்பு கூடுதல் நீதிபதி கசுன் காஞ்சனா திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் முன்வைத்துள்ள முறைப்பாட்டில், திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன், கிரிக்கெட் வீரருடன் உறவைப் பேணி வந்ததாகவும், இந்த உறவின் விளைவாக அவருக்குச் சொந்தமான ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த போதிலும், அவர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும், பின்னர் தன்னையும் குழந்தையையும் கைவிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
அதன்படி, சந்தேக நபர் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் குழந்தைக்கு பராமரிப்பு வழங்க உத்தரவிடுமாறு அந்த பெண் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





