லண்டன் யூஸ்டனில் (London Euston) இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் இரத்து!
லண்டன் யூஸ்டனில் (London Euston) இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில்களும் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவந்தி வெஸ்ட் கோஸ்ட் பாதையில் (Avanti West Coast route) உள்ள சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மென்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வடக்கு வேல்ஸுக்குச் (north Wales) செல்லும் மற்றும் திரும்பி வரும் ரயில் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த இடங்கள் அல்லது பணியிடங்களுக்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் இதனால் ரயில் நிலையங்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் திரண்டிருப்பதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.





