“ஒரு கைதியின் நாட்குறிப்பு” – நூல் வெளியீட்டிற்கு தயாராகும் பிரான்சின் முன்னாள் அதிபர்!
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி (Nicolas Sarkozy) தான் சிறையில் அனுபவித்த துன்பங்கள், அல்லது சிறையில் இருந்த நாட்களை விளக்கும் வகையில் புத்தகம் ஒன்றை எழுதவுள்ளார்.
குறித்த புத்தகத்திற்கு “ஒரு கைதியின் நாட்குறிப்பு” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலையான அவர், சத்தம், துரதிர்ஷ்டவசமாக, நிலையானது” என்றும் “சிறையில் மனிதனின் உள் வாழ்க்கை வலுவடைகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
2007 முதல் 2012 வரை பிரான்சை ஆட்சி செய்த நிக்கோலஸ் சர்கோசி (Nicolas Sarkozy) 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடாபியின் நிதியுதவியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கமைய அவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





