இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண் உயிரிழப்பு!
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டிருந்த மாலினி யோகராசா (வயது 58) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)





