ட்ரோன் தாக்குதல் எதிரொலி- ரஷ்யாவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்!
ரஷ்யாவில் 08 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள.
உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் ஐந்து பிராந்தியங்கள், கிரிமியா (Crimea) மற்றும் கருங்கடல் ( Black Sea) ஆகிய பகுதிகள் மீது 33 உக்ரேனிய ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற உக்ரைன் தயாராக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelensky’) அறிவித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
(Visited 2 times, 3 visits today)




