கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! பயணிக்கு நேர்ந்த கதி!
துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குச் சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த ஒரு பயணி திடீரென நோய்வாய்ப்பட்டு தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பயணி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A-380, நேற்று இரவு சுமார் 7.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)





