இன்று ஆரம்பம் மட்டுமே: நாடு முழுவதும் 1000 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமரின் ஆரம்பமே இன்று நடைபெறும் நுகேகொடை கூட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டது. அதேபோல நாட்டு மக்கள் பரிதவிக்கும்போது எம்.பிக்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.
“ எத்தடை வரினும் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். இது ஆரம்பம் மட்டும்தான், நாடு முழுவதும் ஆயிரம் கூட்டங்கள் நடத்தப்படும்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
“ மொட்டு கட்சியுடன் மேடையேறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வெட்கப்படவில்லை. ஏனெனில் இது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.” எனவும் அவர் மேலும் கூறினார்.





