தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது – வெள்ளை மாளிகை
தென்னாப்பிரிக்காவின்(South Africa) ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) நவம்பர் 22-23ம் திகதிகளில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில், அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை மறுப்பு தெரிவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
“தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் அமெரிக்கா அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காது ” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்(Carolyn Leavitt) செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், தென்னாப்பிரிக்கா வெள்ளை ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை செய்ததாக குற்றம் சாட்டி, ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டில் எந்த அமெரிக்க அதிகாரிகளும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.




