அணுசக்தி பேச்சுவார்த்தைக்காக சவுதி அரேபியாவின் உதவியை நாடும் ஈரான்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்காவை(America) வற்புறுத்துமாறு ஈரான்(Iran) சவுதி அரேபியாவிடம்(Saudi Arabia) கோரிக்கை விடுத்துள்ளது.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்(Mohammed bin Salman) வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கு ஒரு நாள் முன்பு, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன்(Masoud Bachelet) ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், ஈரான் மோதலை நாடவில்லை என்றும் நாட்டின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் அணுசக்தி தகராறை தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி பட்டத்து இளவரசர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஈரானின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா என்று தெரியவில்லை.





