இலங்கை அணிக்கு 163 ஓட்ட இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது நடைபெற்று வரும் 2வது போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 49 ஓட்டங்களும் ராசா(Raza) 47 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
(Visited 4 times, 4 visits today)





