செக் குடியரசில் இரு ரயில்கள் மோதி விபத்து – ரயில் சேவை நிறுத்திவைப்பு!
செக் குடியரசில் (Czech Republic) எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
செஸ்கே புடெஜோவிஸ் ( Ceske Budejovice) நகருக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், 40 பேர் லேசான காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய மீட்பு சேவை தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 7 visits today)





