நுகேகொடை கூட்டம்; இறுதி நேரத்தில் ஐதேக எடுத்துள்ள முடிவு!
நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் பங்கேற்கும் என்று அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் மாபெரும் மக்கள் குரல் என்ற தொனிப்பொருளின்கீழ் அரசாங்கத்துக்கு எதிராக நாளை நுகேகொடையில் பேரணி: கூட்டம் நடத்தப்படுகின்றது.
இக்கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்கும் என ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் அறிவித்திருந்தாலும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தற்போது திடீரென பின்வாங்கியுள்ளனர்.
தாம் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார். ரவி கருணாநாயக்கவுக்கும் அழைப்பு இல்லை. மேலும் சில உறுப்பினர்களும் இது பற்றி குறிப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மாநாட்டில் தமது கட்சி பங்கேற்கும் என்பதை ஹரின் பெர்ணான்டோ உறுதியளித்துள்ளார்.





