பாடசாலை மாணவர்களிடம் அதிகரிக்கும் தீய பழக்கம் – வைத்தியர் எச்சரிக்கை!
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா மருத்துவமனையின் சுவாசப் பழக்க நிபுணர் டாக்டர் துமிந்த யசரத்ன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், 14 அல்லது 15 வயதிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சிகரெட் பழக்கத்தை அனுபவிக்கத் தொடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு இளம் வயதிலேயே புகைபிடித்தல் நுரையீரல் தொடர்பான நோய்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)





