இந்தூரில் கோகைன் போதைப்பொருளுடன் ஆப்பிரிக்க பெண் கைது
மாணவர் விசாவில் இந்தியாவிற்கு வந்த 25 வயது ஆப்பிரிக்கப்(Africa) பெண் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லிண்டா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், இந்தூரில்(Indore) கைது செய்யப்பட்டதாக காவல்துறை துணைத் தலைவர் மகேஷ்சந்த் ஜெயின் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 30 கிராம் கோகைனை குறித்த பெண்ணிடம் காவல்துறையினர் மீட்டுள்ளனர்
அந்தப் பெண் மேற்கு ஆப்பிரிக்க நாடான கோட் டி’ஐவோயரின்(Côte d’Ivoire) குடிமகன் என்றும், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாணவர் விசாவில் இந்தியா வந்த பிறகு மும்பையின்(Mumbai) புறநகரில் உள்ள நாலசோபரா(Nalasopara) பகுதியில் வசித்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 4 visits today)




