டெக்சாஸில் இரண்டு முஸ்லிம் உரிமைக் குழுக்கள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிப்பு
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டெக்சாஸ்(Texas) ஆளுநர் கிரெக் அபோட்(Greg Abbott), அமெரிக்காவின் இரண்டு முஸ்லிம் குழுக்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார்.
பிரபல முஸ்லீம் குழுக்களான அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில்(CAIR) மற்றும் முஸ்லிம் சகோதரத்துவம்(Muslim Brotherhood) ஆகியவை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 30 அலுவலகங்களைக் கொண்ட வாஷிங்டனை(Washington) தளமாகக் கொண்ட CAIR, 1990களின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கான சிவில் உரிமைகளுக்காக போராடி வருகிறது, மேலும் காசா மோதலில் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், “எந்தவொரு அமெரிக்கர்களையும் அல்லது அமெரிக்க நிறுவனங்களையும் பயங்கரவாதக் குழுக்களாக ஒருதலைப்பட்சமாக அறிவிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை, மேலும் எங்கள் அமைப்புக்கு எதிராக இந்த அவதூறு சுமத்த எந்த அடிப்படையும் இல்லை” என்று CAIRன் அரசாங்க விவகார இயக்குநர் ராபர்ட் எஸ். மெக்காவ்(Robert S. McCaw) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.





