இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதன் அவசியத்தை ஜனாதிபதி அனுர குமாரதிஸாநாயக்காவிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் அவர்கள் இதனை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மாகாண சபைத் தேர்தல்கள், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த சிறப்பு சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
(Visited 4 times, 4 visits today)





