தனது கல்வி தகமை குறித்து விளக்கமளித்த நாமல்!
தனது பட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் தவறானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுகிறார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது நேரத்திலேயே தனது பட்டம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டதாகவும், இந்த அரசாங்கம் பதவியேற்ற சில வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு பி-அறிக்கையை சமர்ப்பித்து, எனது பட்டப்படிப்பை விசாரிக்க ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
“பல மாதங்களாக விசாரணைகள் நடந்து வருகின்றன, ஆனால் எந்த அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதுபோன்ற தவறான கூற்றுகள் ஒன்லைனில் தொடர்ந்து பரவி வருகின்றன
நுகேகொடை பேரணியில் உண்மை வெளிப்படும். நிகழ்வுக்கு முன்னதாக அரசியல் எதிரிகள் தன்னை இழிவுபடுத்த முயற்சிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.





