இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தடுமாறிய 3 விமானங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற மூன்று விமானங்கள் சீரற்ற காலநிலை காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதற்கயை மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என்பனற்றுக்கு அவை திருப்பி விடப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் இன்று காலை வேளையில் அடர்ந்த மூடுபனி காரணமாக இவ்வாறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-881 மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் ஆகிய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

அத்துடன் சவுதி அரேபியாவின் தம்மத்திலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-254 இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை சீரான நிலையில், விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!