எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறிய சீனா – பொருளாதாரத்தில் புதிய புரட்சி!
சீனா டீசல் லொறிகளை எதிர்பார்த்ததை விட வேகமாக மின்சார சாதனத்திற்கு மாற்றி வருகிறது. இது உலகளாவிய எரிபொருள் தேவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய தரவுகளின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் சீனாவில் இயங்கிய பெரும்பாலான லொறிகள் டீசலில் இயங்கின. 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவை பேட்டரிகளில் இயங்கும் (மின்சார சாதனத்தில் இயங்கும்) லொறிகளாக மாற்றப்பட்டன.
தற்போது மின்சாரத்தில் இயங்கும் லொறிகள் 22 சதவீத பங்கை வகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார லொறிகள் இந்த ஆண்டு புதிய விற்பனையில் கிட்டத்தட்ட 46% ஐயும் அடுத்த ஆண்டு 60% ஐயும் எட்டும் என்று பிரித்தானிய ஆராய்ச்சி நிறுவனமான BMI கணித்துள்ளது.
நவீன பொருளாதாரத்தில் கனரக லொறிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. டீசலில் இயங்கும் லொறிகள் வளிமண்டல மாசடைவுக்கும் பங்களிக்கிறது. தற்போது வளர்ச்சியடைந்து வரும் மின்சார வாகன பாவனை இந்த சூழ்நிலைகளை இலகுவில் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பெரும்பாலான தொழிலாளர்கள் டீசலை நம்பியிருப்பதை குறைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்குப் பிறகு எரிபொருளைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடான சீனாவில், டீசல் நுகர்வு ஜூன் 2024 இல் ஒரு நாளைக்கு 3.9 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





