சீனா – ஜப்பான் மோதல்! 4.9 லட்சத்துக்கும் அதிகமான விமானப் பயணச் சீட்டுகள் இரத்து!
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சீனர்கள் தங்கள் விமானச் டிக்கெட்டுகளை மீளப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகல் நிலையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, இதுவரை சுமார் 491,000 விமானச் டிக்கெட்டுகள் சீன பயணிகளால் .ரத்து செய்யப்பட்டுள்ளன.
சமகாலத்தில் ஜப்பானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சீன அரசாங்கம் அறிவித்திருந்து. இதனையடுத்து நேற்று முன்தினம் 82.15 சதவீதம் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன.
இரத்து செய்யப்பட்ட பயண டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, விற்பனை செய்யப்பட்ட புதிய விமானப் பயணச் டிக்கெட்டுகளை விட 26 சதவீதம் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 நோய்த்தொற்றுயின் பின்னர் பாரியளவில் விமான பயணங்கள் இரத்து செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென விமானத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொடர்ச்சியான பயண இரத்து நடவடிக்கையால், பாரியளவில் வருமான இழப்பினை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பெரும்பாலும் ஜப்பானிய விமான நிறுவனங்களை விடச் சீன விமான நிறுவனங்களே அதிக பாதிப்பு என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





