இலங்கையில் கண் தானம் செய்யும் 2.2 மில்லியன் மக்கள்
இலங்கையில் 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணத்திற்குப் பின் தங்கள் கண்களைத் தானம் செய்ய உறுதி அளித்துள்ளனர்.
இது, நாட்டின் நீண்டகால மனிதாபிமான முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என இலங்கை கண் தான சங்கம் (Eye Donation Society) தெரிவித்துள்ளது.
கடந்த 11 மாதங்களில், 99,950 விழி வெண்படலங்கள் வெளிநாட்டுப் பெறுநர்களுக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன.
இது உலகளாவிய ரீதியில் இலங்கையின் கண் தானம் தொடர்பான குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 80,011 கார்னியாக்கள் உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது.
மருத்துவ நோக்கங்களுக்காக இதுவரை 13,154 திசுக்களை விநியோகித்துள்ளதாகச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
கண் வைத்தியசாலையில் 1,207 இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





