செய்தி

மாவீரர் நாள் அனுஷ்டித்தால் சட்டம் பாயும்: எச்சரிக்கை விடுப்பு!

“ உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதத்திலான செயற்பாட்டால் எவரேனும் ஈடுபட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது,

“ வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. தற்போதே நிகழ்வு ஆரம்பமாகிவிட்டதென தெரிகின்றது. இந்நிலையில் இந்தியாவில் புலி ஆதரவாளராகக் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (தொல் திருமாவளவன்) பலாலி விமான நிலையம் ஊடாக வந்து நிகழ்வுகளில் பங்கேற்கின்றார் எனவும் அறியமுடிகின்றது. இவர் 2011 இல் இலங்கை வர முற்பட்டபோது திருப்பி அனுப்பட்டிருந்தார்.

புலிகள் நினைவுகூரப்பட்டால் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“ சட்டம், ஒழுங்கை பாதுகாக்க சட்டம் செயல்படும்;. பொதுமக்கள் பாதுகாப்புதான் எமக்கு முக்கியம். இனவாதத்துக்கு இடமில்லை. உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கு அவர்களின் உறவுகளுக்கு உள்ள உரிமையை ஏற்கின்றோம். ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதத்துக்கு தூபமிடும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!