இலங்கை

திருகோணமலை சம்பவம்: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!

திருகோணமலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிக்கை கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல் நடந்தால் அதற்கு எதிராக போராடலாம், ஜனநாயக மீறல்கள் இடம்பெற்றால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம். பொருளாதாரம் சரிந்தால் அதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் தோல்வி கண்ட தரப்புகள் இனவாத சூழ்நிலையை ஏற்படுத்த முற்படுகின்றன.

இப்பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளேன்.
எமது நாட்டில் இனவாதத்துக்கு இடமளிக்கமாட்டேன். பௌத்த மக்களும் இடமளிக்கமாட்டார்கள். பொதுவாக அனைத்து இன மக்களும் இனவாதத்தை நிராகரிக்கின்றனர்.

எனவே, பழைய இனவாத நாடகங்கள் இனி இந்நாட்டில் எடுபடாது. இனவாதத்தை இனி அரசியல் வரலாற்றை எழுத முடியாது.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

(Visited 6 times, 6 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!