ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிசாசா? கடவுளா?
ஐ.நா. உரிமைகள் பேரவையை பிசாசு என விமர்சிக்கப்போவதும் இல்லை. கடவுள் என போற்றப்போவதும் இல்லை. நாட்டு நலன் கருதி நடு நிலைமையுடன் செயல்படுவோம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ பாலஸ்தீன மக்களின் சுயாதீன உரிமை தொடர்பில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
அதேபோல நாடு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மத்தியஸ்தத்துடன் செயல்பட்டது. ஜெனிவா மனித உரிமைகளை பேரவையை பேய் என்றோ கடவுள் என்றோ நாம் குறிப்பிடமாட்டோம்.
மனித உரிமைகளை வலுப்படுத்த தேசிய பொறிமுறை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நமது உறுதியான நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.” – எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.





