மூன்று ஆண்டுகளில் முற்றிலும் புதிய வடிவம்! ஐபோனை மறுசீரமைக்க அப்பிள் திட்டம்
அப்பிள் (Apple) நிறுவனமானது தனது ஐ-போன் திறன்பேசியை (iPhone Smartphone) முற்றுமுழுதாக மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி இணையத்தளம் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் புதிய வடிவமைப்புகளைக் கொண்ட ஐ-போன் திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படும் என அந்த இணையத்தளத்தின் தொழில்நுட்பச் செய்தியாளர் மார்க் கெர்மன் (Mark Kerman) தெரிவித்துள்ளார்.
அப்பிள் நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் புதிய கருவிகளை அறிமுகம் செய்திருந்தது.
எனினும், அப்பிளின் போட்டி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence – AI) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
எனினும் அப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகளில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் இல்லாதிருந்தது குறித்து பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்தப் பின்னணியிலேயே அப்பிள் இந்த மறுசீரமைப்பு முயற்சியைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.





