இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – இனவாதமாக சித்தரிக்கும் முயற்சி

திருகோணமலையில் நிகழ்ந்த சம்பவத்தை இனவாத அல்லது மதவாத அசம்பாவிதமாகச் சித்தரித்துக் காட்டச் சில சக்திகள் முயல்வதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

இது முற்றிலும் நீதிமன்ற விவகாரம் என்றும், இந்தச் சம்பவத்தில் அரசாங்கத்தின் தலையீடு கிடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நீதிமன்றத்தின் சுதந்திரத்தை வலுவாகப் பாதுகாக்கும் அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்த உரையாற்றுகையில், நாட்டில் நவீன சிறைச்சாலை வலைப்பின்னலை நிர்மாணிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் ஒட்டுமொத்த நீதிமன்ற நடைமுறையிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!