ஜப்பானில் எரிமலை வெடிப்பு! விமானச் சேவைகள் இரத்து – சாம்பல் குறித்து எச்சரிக்கை
ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவில் அமைந்துள்ள சகுராஜிமா (Sakurajima) எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த மூன்று வெடிப்புகளுக்குப் பிறகு, நேற்று நான்காவது முறையாகவும் எரிமலை குமுறியுள்ளது.
இந்த வெடிப்பின்போது நான்கு கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் எழுந்துள்ளது. அத்துடன், சுமார் இரண்டரை கிலோமீட்டர் வரை புகையும் சாம்பலும் பரவின.
இதன் காரணமாக, அருகில் உள்ள விமான நிலையத்தில் 30 விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
பொதுமக்கள் குடைகள் மற்றும் முகமூடிகளைப் பயன்படுத்தி சாம்பலில் இருந்து பாதுகாப்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மலைப்பகுதிக்குச் செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)





