இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் அரசியல் வாக்குவாதத்தில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கொலை

பீகார்(Bihar) தேர்தல் தீர்ப்பு தொடர்பாக அரசியல் விவாதங்கள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) குணா(Guna) மாவட்டத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் தனது உறவினர்களால் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பீகாரின் ஷிவ்ஹார்(Shivhar) மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் சங்கர் மஞ்சி என்ற தொழிலாளி, தனது தாய் மாமாக்கள் 25 வயது ராஜேஷ் மஞ்சி மற்றும் 27 வயது தூபானி மஞ்சி ஆகியோருடன் தங்கியிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் சங்கர் மஞ்சி ஒரு ராஷ்ட்ரிய ஜனதா தளம்(Rashtriya Janata Dal) ஆதரவாளர் என்றும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஜனதா தளம்(Janata Dal)ஆதரித்ததாகவும் தெரியவந்ததாக காவல் நிலைய பொறுப்பாளர் அனூப் பார்கவா குறிப்பிட்டுள்ளார்.

மூவரும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாகவும், அது உடல் ரீதியான சண்டையாக மாறியதாகவும் அனூப் பார்கவா(Anoop Bhargava) தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் மற்றும் தூபானி ஆகியோர் சங்கரை அருகிலுள்ள சேற்றுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கீழே தள்ளியதாகவும், இதன் விளைவாக அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ராஜேஷ் மற்றும் தூபானி ஆகியோர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!