உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்களில் ஐந்து பேர் உயிரிழப்பு
உக்ரைன்(Ukraine) மீது ரஷ்யா(Russia) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு உக்ரைனில் ஒரு மழலையர் பள்ளியை தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு கார்கிவ்(Kharkiv) பிராந்தியத்தில் உள்ள முன்னணி நகரமான பாலக்லியாவின்(Balakliya) குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
அதனை தொடர்ந்து டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பல அடுக்குமாடி கட்டிடங்களையும் ஒரு மழலையர் பள்ளியையும் தாக்கி அழித்ததாக” ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) பிரான்சுடன் 100 புதிய போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற உபகரணங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.





