மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் பலி!
மீட்டியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மகாதுர நளினின் சகோதரி மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மீட்டியாகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 3 visits today)





