நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மாணவிகள்!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் இன்று 25 மாணவிகளை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாடசாலையின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு நபர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஆயுதம் ஏந்திய எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அதிகாலை 4:00 மணிக்கு நடந்ததாகவும், மாணவிகள் அவர்களின் தங்கும் விடுதிகளில் இருந்து கடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும், மேலும் மாணவிகளை கடத்துவதற்கு முன்பு காவலர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட மாணவர்களை மீட்பதற்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





