ஐரோப்பா செய்தி

இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுதங்களை வழங்கும் ஜெர்மனி!

இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களை விநியோகிப்பதற்கான தடையை ஜெர்மனி அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

புதிய அறிவிப்பின்படி வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் ஆயுத விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் – ஹமாசிற்கும் இடையிலான போரின்போது சில ஆயுதங்கள் காசா மக்கள் மீது பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  விநியோகம் செய்வதை ஜெர்மனி நிறுத்திவைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது இருநாட்டிற்கும்  இடையிலான  போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை தொடர்ந்து  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி மிகப் பெரிய அளவில் பங்கு வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!