இந்தியர்களை மெக்காவிற்கு அழைத்துச் சென்ற பேருந்து விபத்து – 42 பேர் உடல் கருகி பலி!
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்தனர்.
லொறியொன்றுடன் மோதிய நிலையில் பேருந்தின் எரிபொருள் டேங்கர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் வெளியேற முடியாமல் பேருந்தில் சிக்கிக்கொண்ட நிலையில், ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்துள்ளதுடன், எஞ்சிய அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குழு இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





