கருத்து & பகுப்பாய்வு செய்தி

செவ்வாய்க் கிரகத்தில் பிரமிக்க வைக்கும் எரிமலை! புகைப்படங்களை வெளியிட்ட விஞ்ஞானிகள்

செவ்வாய்க் கிரகத்திலுள்ள மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) தொடர்பான புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் (Mars Express Orbiter) மூலம் எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிமலையில் இருந்து வெளியேறிய தீக்குழம்புகள் ஆறுகளாக ஓடிய நிலையில், தற்போது உறைந்த நிலையில் தடயங்களாக உள்ளதாகப் புகைப்படத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், பல கிலோமீட்டர் உயரமுள்ள பாறை முகடுகளும் (Rock Ridges) ஆங்காங்கே காணப்படுவதாக ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த எரிமலையில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சீற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் அது குளிர்ந்து போயிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1971ஆம் ஆண்டு முதன்முறையாக ஒலிம்பஸ் மோன்ஸ் எரிமலை, நாசாவின் மரைனர் – 9 (Mariner 9) விண்கலம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எரிமலை 27 கிலோ மீட்டர் உயரமும் 600 கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!