இலங்கை

சீனாவில் மேலுமொரு தூதரகம் அமைக்கிறது இலங்கை!

சீனாவில் மேலுமொரு தூதரகத்தை நிறுவுவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.

சீனாவில் இருந்து அதிகளவு வெளிநாட்டு பயணிகளை வரவழைக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதற்கமைய 2026 ஆரம்பத்தில் சீனாவின் செங்டு (Chengdu) நகரில் மேற்படி கொன்சல் ஜெனரல் அலுவலகம் அமையும் எனவும் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.

“ சீனாவில் சில நகரங்களில் இலங்கையின் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையிலேயே புதிய அலுவலகம் அமைகின்றது.
அதேபோல பிரேசிலிலும் கொன்சல் ஜெனரல் அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.” எனவும் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!