போரை வைத்து பிழைப்பு நடத்திய ராஜபக்சக்கள்: பொன்சேகா பகீர் தகவல்!
“போரை வைத்து ராஜபக்சக்கள் பிழைப்பு நடத்தினர். நாட்டை பாதுகாக்கவில்லை. முப்படையினரே நாட்டை பாதுகாத்தனர்.” என்று முன்னாள் இராணுவத் தளபதில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தால் போர் முடிவுக்கு வந்ததால்தான் அவர் போரை முடிவுக்கு கொண்டுவந்தார் எனக் கூறப்படுகின்றது. புலிகளுடன் பேச்சு நடத்தி சமாதானத்தை ஏற்படுத்தும் உறுதிமொழியே மஹிந்த சிந்தனையில் இருந்தது. இதற்கமையவே புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வடக்கில் வாக்களிப்பு இடம்பெறுவது தடுக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ச நாட்டை பாதுகாத்தார் என்பதை ஏற்கமுடியாது. பல அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் முப்படையினரே பாதுகாத்தனர். இதற்காக படையினர் உயிர் தியாகங்களை செய்திருந்தனர்.
ஆயுத கொள்வனவில் மோசடி, அதிகாரத்தை தக்க வைத்தல் போன்ற நடவடிக்கைகளையே ராஜபக்சக்கள் முன்னெடுத்தனர்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.





